Wednesday, 26 November 2014

சிறுத்தை - சினிமா விமர்சனம்

பழைய சாதம் பொக்கிஷம் என்ற லேபிளில் இருக்கும் பதிவுகள் எல்லாது பழைய பதிவுகள் அவை அந்த பதிவிலிருந்து எடுத்து வைப்பதற்காக மட்டுமே இங்கு பதியப்படுகிறது.

இது ஜனவரி 2011 மாதத்தின் பதிவு

ரத்தினவேல் பாண்டியன் (கார்த்தி -1) உயிருடன் இருப்பதாக ஒரு ரௌடி அவன் தலைவனுக்கு போன் பண்ணி சொல்லுகிறான். உடனடியாக ஒரு கும்பல் அவனை கொல்ல கிளம்புகிறது.
ராக்கெட் ராஜா (கார்த்தி -2) ஒரு பிராடு. அவனுடன் இருக்கும் சந்தானமுடன் இணைந்து ஊர் முழுவதும் திருட்டு வேலைகளை செய்கின்றனர். ஒரு கல்யாணத்தில் திருட போகும் போது அங்கு தமனாவை சந்திக்கிறார். கார்த்தியை -2 மிக பெரிய மனிதராக நினைக்கும் தமன்னா அவர் மீது காதல் கொள்கிறார். இந்நிலையில் அவர் திருட போகும் இடத்தில் ஒரு குழந்தை அவரை பார்த்து அப்பா என்கிறது. அங்கு வரும் போலீஸ்காரர் நீ தான் அந்த குழந்தைக்கு அப்பா என்று சொல்லி ஒப்படைக்கிறார். அவனோ குழந்தையை விட்டு எஸ்கேப் ஆக முயற்சிக்க போலீஸ் மீண்டும் மீண்டும் அவனிடமே ஒப்படைக்கிறது.

ஒரு இடத்தில் ஒரு கும்பல் அவனையும் குழந்தையும் கொல்ல முயற்சிக்க அங்கு வருகிறான் கார்த்தி -1. அவன் இருவரையும் காப்பாற்றி அழைத்து செல்கிறான். பிளாஷ் பேக் ஓபன் ஆகிறது. ஒரு ஊரில் மிகப்பெரிய ரௌடி கும்பல் ஆட்சி செய்து வருகிறது. மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அந்த ஊருக்கு வரும் ஒரு SP (கார்த்தி -1) ரௌடிஐ ஜெயில் லில் போட்டு அடைக்கிறார். ஆனால் ஒரு மந்திரி வந்து அவர்களை DIG மூலம் விடுவிக்கிறார். பிறகு நடக்கும் மோதலில் ரௌடி தலைவனின் மகனை கொன்று விடுகிறான் கார்த்தி. பிறகு மக்களை பணயமாக வைத்து ரவுடி கார்த்தியை சுட்டு புதைத்து விடுகிறான். அங்கு வரும் மக்கள் கார்த்தியை மீட்டு காப்பாற்றி வேறு ஊர் அனுப்புகின்றனர். அந்த குழந்தை தான் அவர் குழந்தை. விவரங்களை கூறி விட்டு அவன் செத்து விடுகிறான். கார்த்தி - 2 போலீஸ் வேடத்தில் சென்று பழி வாங்குவது தான் சிறுத்தை.
படம் மிகவும் பிரமாதமாக உள்ளது. காமெடி சூப்பர். பாடல்களும் பக்கா. மிக அருமையான ஆக்சன் மூவி. பொங்கலில் முதலிடம் பிடிக்கப்போகும் படம்.

ஆனால் என்ன படம் தான் ரிலீஸ் ஆகவில்லை. நான் தான் விக்ரமருக்குடு படம் பார்த்து விட்டு சொன்னது, உல்டா கதை என்னது. ஆனால் ட்ரைலர் பார்க்கும் போது அதேபோல் படம் இருக்கும் என்பது தெரிகிறது.

பார்த்து என்சாய் பண்ணுங்க.

-------------------------------------------------------

அன்பு மக்களே. பொங்கலுக்கு ஊருக்கு சென்று விட்டேன். அதனால் தான் கடந்த சில நாட்களாக பதிவு எதுவும் எழுதவில்லை.
ஊரில் படம் பார்க்க நேரமில்லை. ஊரிலிருந்து சென்னை திரும்பியதும் சிறுத்தை பார்த்தேன். படம் நிச்சயம் மாபெரும் வெற்றி தான். படம் பார்க்க கூட்டம் அலைமோதுகிறது நிச்சயம் படம் சூப்பர் ஹிட் தான்.
நான் பொங்கலுக்கு முன்னாடி எழுதிய சிறுத்தை விமர்சனம் முதல் முறையாக என்று நான் எழுதிய பதிவு அதற்கு வந்த கமெண்ட்ஸ் ஆகியவற்றுடன் படம் பார்க்கும் போது நான் எழுதிய விமர்சனம் தான் நினைவுக்கு வந்தது. பரவாயில்லை. நாமும் ஒரு படம் பார்த்து வேறு மொழி ட்ரைலர் பார்த்து இரண்டையும் கலந்து நாம் சொன்ன விமர்சனம் தேறிவிட்டது. நாமும் கூடிய சீக்கிரம் முன்னணி பதிவர் ஆகலாம் என்று நம்பிக்கை மேலிட்டது. நாமும் இப்பதானே ப்ளாக் பத்தி தெரிஞ்சிகிட்டு எழுத ஆரம்பிச்சிருக்கோம்.


தயவு செய்து இதை படிக்கும் சீனியர் பிளாக்கர்கள் எனக்கு சில அட்வைஸ் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.


முதல் விஷயம் ஓட்டளிப்பு பட்டை எவ்வாறு பெறுவது. தமிழ் 10 இணையத்தில் தெளிவாக இருந்ததால் அதை இணைத்து விட்டேன். ஆனால் திரைமணம் மற்றும் இன்ட்லி பட்டை எவ்வாறு நான் எனது ப்ளாகில் இணைப்பது.


அடுத்தது இவை அல்லாமல் வேறு எந்த திரட்டிகளில் இணைத்தால் நல்லது.
இளையவர்களுக்கு வழி காட்டுவது தானே பெரியவர்களுக்கு மேன்மை.


நன்றி எனக்கு வரப்போகும் எல்லா தகவல்களை அளிக்கப்போகும் நல் உள்ளங்களுக்கு
 
ஆரூர் மூனா

No comments:

Post a Comment