Thursday, 11 December 2014

ரஜினியின் லிங்கா - சினிமா விமர்சனம்

மற்ற நடிகர்களின் படங்களுக்கு சூப்பர் ஹிட், ஹிட், அபொவ் ஆவரேஜ், ஆவரேஜ், பிலோ ஆவரேஜ், சுமார், மொக்கை, சூர மொக்கை என ரகம் ரகமாக பிரிக்கலாம். ஆனால் ரஜினி படங்களில் சூர மொக்கையாக இருந்தால் சுமார் படம் எனவும், மற்ற படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் எனவும் ரெண்டே ரகம் தான். லிங்கா சந்தேகமே இல்லாமல் சூப்பர் ஹிட் படம் தான்.

லிங்காவைப் பற்றி வேறென்ன சொல்ல, ரஜினி ரஜினி ரஜினி மட்டும் தான் படமே. இந்த ஒரு வார்த்தை போதும் மனம் மகிழ. மூளைக்கு தெரிகிறது இதெல்லாம் அதிகம் என. ஆனால் என்ன செய்ய மனது இதைத்தான் விரும்புகிறது.


ரஜினி சந்தானம் அன் கோவுடன் சென்னையில் திருட்டு தொழில் செய்து வருகிறார். தாத்தா ராஜா லிங்ககேஸ்வரன் சொத்துக்களை இழந்து குடும்பத்தை நிர்க்கதியில் விட்டு விட்ட கோபத்தில் இருக்கிறார் பேரன் லிங்கா. 

ஆனால் தாத்தா கட்டிய கோயிலை அவர் தான் திறக்க வேண்டும் என ஊர்க்காரர்கள் விரும்பி அனுஷ்கா மூலம் ரஜினியை ஊருக்கு அழைத்து வருகின்றனர். அங்கு மரகதலிங்கத்தை திருட முயற்சிக்கும் போது தாத்தாவின் கதை தெரிய வருகிறது.


ஆங்கிலேயர்களின் மறைமுக எதிர்ப்பை மீறி தன் சொத்து முழுவதையும் இழந்து மக்களுக்காக அணையை கட்டும் தாத்தா ஐசிஎஸ் லிங்கேஸ்வரன் சூழ்ச்சியால் மக்களாலேயே அந்த ஊரை விட்டு விரட்டப்படுகிறார். பின்னர் உண்மை அறிந்து மனம் திருந்தும் மக்கள் அழைத்தும் அந்த ஊருக்கு வர மறுத்து விடுகிறார்.  

விவரம் தெரிய வந்ததும் பேரன் ரஜினி அந்த அணைக்கு தற்காலத்தில் ஏற்படும் பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார் என்பதே லிங்காவின் கதை.

ரஜினியின் அறிமுக காட்சியில் விசில்கள் பட்டையை கிளப்புகின்றன. மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியின் படம் வேறென்ன வேண்டும் ரசிகர்களுக்கு. திகட்ட திகட்ட விருந்து படைத்து அனுப்பியிருக்கிறார் இயக்குனர்.


கிராபிக்ஸ் என்று தெரிந்தும் ரயில் பைட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அந்த நடையிலும் உடையிலும் ஸ்டைலிலும் ரஜினி எல்லா நடிகர்களின் அந்தஸ்துக்கும் மேலே சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகிறார்.

படத்தின் ஆகப்பெரும் பலம் ப்ளாஷ்பேக் காட்சிகள் தான். பேரன் ரஜினியை விட தாத்தா ரஜினிதான் அதிகம் கவர்கிறார். தலைவா, தலைவா என்று பெரும்குரலெடுத்து அழைக்கத் தோன்றுகிறது.


வயசானாலும் தலைவனின் அழகும் ஸ்டைலும் என்னைக்கும் மாறாது. டைட் குளோப் மட்டும் தான் சற்று உண்மையை சொல்கிறது. அப்பவும் தலைவனுக்கு வயசாகி விட்டதே என்று வருந்தத்தான் தோன்றுகிறது. ஆனாலும் தலைவன் தலைவன் தான்.

ரஜினிக்கு அடுத்து கைத்தட்டல் பெறுபவர் சந்தானம் தான். எல்லா ரஜினியின் டயலாக்குக்கும் கவுண்ட்டர் கொடுத்து அப்ளாஸை அள்ளுகிறார். கருணாகரன் வருகிறார் அவ்வளவு தான்.

அனுஷ்கா சும்மா கும்மென்று இருக்கிறார். சோனாக்ஷியும் அப்படித்தான். ரஜினி படத்தில் அவரைத் தவிர மற்றவர்களை புகழ்வது தலைவனுக்கு செய்யும் இழுக்கு. அதனால் இவ்வளவு தான் சொல்ல முடியும்.

வில்லன்கள் தான் சற்று கவலையை ஏற்படுத்துகின்றனர். பலம் குறைந்த வில்லன்கள் எடுபடாமலேயே போகின்றனர். லெஜன்ட் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு முன் கம்பீரமாக நின்று பெயர் வாங்கிய ஜெகபதிபாபு தலைவன் முன்னால் எடுபடாமலேயே போகின்றார். 

வெள்ளைக்கார வில்லனும் அப்படித்தான். நயவஞ்சகனாக வரும் சுந்தரராஜன் மட்டும் ஓகே. ரகுவரன் இல்லாத குறை இப்போது தான் தெரிகிறது. பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருக்கிறது.

முதல் ஒரு மணிநேர காட்சிகள் ரொம்பவும் லைட்டாக இருப்பது போல் எனக்கு படுகிறது. இருந்தாலும் தலைவனுக்காக ஓகே.

ஆரம்பம் முதல் இறுதி வரை ரஜினிக்காக மட்டுமே படத்தை எந்த வித சங்கடங்களும் இன்றி சந்தோஷமாக பார்க்கலாம். ரஜினி ரசிகர்களுக்கு செம விருந்து.

என்னடா படத்தில் குறைகளே இல்லையா என்று யோசிக்க வேண்டாம். அது இருக்கு ரெண்டு பக்கத்துக்கு. ரசிகனாக என்னதான் கைதட்டி விசிலடித்து படத்தை ரசித்து பார்த்தாலும் விமர்சகன் அவ்வப்போது எட்டிப் பார்த்து ரசிப்புத்தன்மையை குறைத்துக் கொண்டே வந்தான். அவன் கொன்றுதின்று ரசிகனின் பார்வையில் அமைந்த விமர்சனம் இது.

இன்று இன்னும் ஒரு காட்சி பார்க்க வேண்டியிருக்கிறது. அதனை பார்த்து விட்டு ரசிகனை உள் தள்ளி விமர்சகனாய் ஏகப்பட்ட சர்ச்சைகளோடு நாளை பதிவிடுகிறேன்.

இந்த ஒரு காட்சி பார்க்க 1200 ஓவா செலவு பண்ணது ஜீரணிக்க முடியவில்லை. ரூம் போட்டு மகாதியானத்துடன் புலம்பி விட்டு நாளை வருகிறேன்.

ஆரூர் மூனா

15 comments:

 1. அண்ணே ரொம்ப நாளா காணோம் ..உங்க பேஸ்புக் லிங்க் தாங்க

  ReplyDelete
 2. நெற்றி வேர்வை நிலத்தில் விழப் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தை இப்படி......?

  ReplyDelete
  Replies
  1. ஒரு டிக்கெட்டு காசு 200 ரூவா தான் அய்யா, ஆனால் எனக்கு நடந்தது வேறு, அப்புறமா சொல்றேன்.

   Delete
 3. மிக கேவலமாக இருக்கிறது விமர்சனம்.. :)

  ReplyDelete
 4. மப்புல வந்த வார்த்தைகளா மச்சான் ?

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சிங்கோ

   Delete
 5. PADAM PUTTIKICHI.ITHULA INNORU THADAVAI PARTHALUM ATHAY BORE ADIKKUM CLIMAXTHAN

  ReplyDelete
  Replies
  1. அய்யாவுக்கு ஆசை அப்படித்தானா, அப்படியே வச்சிக்கங்க.

   Delete
 6. அப்ப அணையைக் கட்டுனது சிறுவன் முத்துசுவாமி ஐயர் இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. அவரு முத்துஸ்வாமி தீட்ஷிதர்ன்னு சொன்னாங்களே அது தப்புங்களா

   Delete
 7. ரசனைக்கு முன் பணம் எல்லாம் எம்மாத்திரம்...?

  ReplyDelete
 8. உண்மையில் ரஜினியை முன் போல் பார்க்க முடியாது என்று பலரும் மனதில் விதைத்த பதட்டத்தால் ரஜினியை பார்த்தாலே போதும் என்ற நிலையில் மனதெல்லாம் பரவசம் கொண்டு ரசித்ததில் விமர்சகன் காணாமல் போய்விட்டான் எனக்கும்.

  ReplyDelete
 9. உண்மையில் நானெல்லாம் லிங்கா பார்க்க செல்லவில்லை ரஜினியை பார்க்கவே சென்றேன் பார்த்ததில் மகிழ்ச்சி. தலைவர் இளமை ஆகிறாரோ இல்லையோ ஒவ்வொரு தலைவர் படம் ரிலீஸ் ஆகும்போதும் நமக்கு 5 வயது குறைந்த எண்ணம் வருவது நிச்சியம்( இது அறிவு பூர்வமானது இல்லை உணர்வு ரீதியானது ஒரு ரசிகனால் மட்டுமே உணர இயலும் ). START MUSIC திட்ரவங்க திட்டலாம் WE DONT CARE .

  ReplyDelete