Friday, 23 January 2015

தொட்டால் தொடரும் - சினிமா விமர்சனம்

படத்தின் கதையை விட படம் பார்க்க போனது தான் இன்னும் சுவாரஸ்யம். மதியம் 1.10 மணிக்காட்சி. வீட்டை விட்டு 11 மணிக்கு கிளம்பி கூடவே வர்றேன்னு சொன்ன சைத்தானை அழைத்துக் கொண்டு பைக்கில் கிளம்பினேன். பீனிக்ஸ் மால் என்ட்ரி டைம் 01.05. முதல் முறையாக மாலின் உள் நுழைகிறேன். தட்டுத்தடுமாறி திரையரங்கை கண்டுபிடித்து உள்ளே நுழையும் போது மணி 1.40. முதல் பாதியில் பெரும் பகுதி கடந்திருந்தது. 


நமக்கு இந்த ஓவர் அல்ட்டாப்பு ஒத்து வராது. மகாதியானத்திற்கு போனால் கூட நட்சத்திர பாருக்கு செல்ல மாட்டேன். அங்கு அவுன்ஸ் கணக்கு செட்டாகாது. அளவும் தெரியாமல் தாண்டிப் போய் விடும் அல்லது தொண்டை நனைக்க மட்டும் செய்யும். கால் கல்லு, அரைக்கல்லு வாங்கி ரெண்டு ஆப்பாயிலு சேர்த்து உள்ளே தள்ளினா தான் திருப்தி கிடைக்கும்.

அது போல் தான் இந்த அரங்கமும். நமக்கு வண்டியை நிறுத்தி இரண்டு நிமிடங்களுக்குள் அரங்கில் அமரும் வில்லிவாக்கம் ஏஜிஎஸ், கொளத்துர் கங்கா, பெரம்பூர் எஸ்2, வில்லிவாக்கம் நாதமுனி, திருவாரூர் சோழா, தைலம்மை, நடேஷ் அரங்கங்கள் போதும். பார்க்கிங்கில் இருந்து அரங்கம் செல்ல அரைமணியெடுக்கும் தொல்லைகள் வேண்டவே வேண்டாம். அதில் எவ்வளவு அதிகபட்ச திருப்தி கிடைத்தாலும் கூட.


இனி படம்.

உள்ளே சென்ற போது போனில் அருந்ததி தமனுடன் போனில் பேசிக் கொண்டு இருந்தார். பக்கத்தில் இருந்த செல்வினிடம் நடந்தவைகளை கோர்வையாக கேட்டு படத்தினுள் என்னை நுழைத்துக் கொண்டேன்.

கதை எல்லாம் வேண்டாம்.

திரைப்படத்தின் சாதனைகளில் முக்கியமானது க்ளைமாக்ஸ் முன்னர் வரை படம் போரடிக்க வில்லை. புலம்ப வைக்கவில்லை, தம்மடிக்க வெளியில் செல்ல தோணவில்லை.


ஐ படத்தில் சைனா ஏரியாவில் காட்சிப்படுத்தல் சிறப்பாக இருந்தாலும் கதை நகர்வில் ரொம்பவே போரடித்தது. 

இந்த படம் அப்படி இல்லை. காட்சிக்கு காட்சி சிறப்பாகவே நகர்கிறது. அதற்கு அசாத்திய திறமை வேண்டும். வாழ்த்துக்கள் தலைவரே.

நாயகனின் குரல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மெச்சூர்டு மேன்லி வாய்ஸ். ஹாண்ட்சம்மாக இருக்கிறார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அளவுக்கு ஹீரோயிசத்தில் சிறப்பாக செய்திருக்கிறார்.

அருந்ததி நல்ல அழகு (குளோசப் தவிர), நல்லாவே நடிக்கிறார். ஆனால் எக்ஸ்பிரசன்கள் எல்லாமே பத்து மடங்கு இருக்கிறது. காதலுடன் தமன்னிடம் பேசும் போது கண்கள் ஒரு பக்கம் நடிக்க, புருவம், கன்னம் எல்லாம் தனித்தனியாக நடிக்கிறது விஜே போல.


பாலாஜி நகைச்சுவைக்காம், ஒன்னும் சொல்வதற்கில்லை. அவ்வளவு தான் ஆங்ங்.... மென் சோகம் போல் மென் நகைச்சுவையா தலைவரே. நாமெல்லாம் கண்களில் நீர் தளும்ப சிரித்து பழக்கப்பட்டவர்களாச்சே.

முதல் பாதியில் பரபரப்பு தொடங்கும் வரை நாடகத் தொனி தான் தெரிந்தது. பின்னால் இருந்து ஒருவர் சன்டிவியில் சுட்டதா என்று பக்கத்தில் இருந்தவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். 

பாடல்கள் இரண்டு நன்று, பார்க்கவும் சிறப்பு. இடைவேளை வரும் வேளை நம்மை நிமிர்ந்து உட்கார வைத்தது. அடுத்தது காட்சிகள் பரபரவென இருக்குமென நினைத்தேன். ஆனால்.................

சிற்சில குறைகள் இருந்தாலும் படத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன் க்ளைமாக்ஸ் வரை. காப்பிஷாப்பில் வில்லனும் நாயகனும் பேச ஆரம்பித்தது முதல் இறுதி வரை எனக்கு புரியவில்லை அல்லது பிடிக்கவில்லை.

துரத்தல் காட்சி தெளிவாக இல்லை. நாயகன், நாயகி ஒரு கார், வில்லன் ஒரு கார், வாடகை கொலையாளி ஒரு பைக், வில்லனை கொல்ல துரத்தும் விஜய் கணேஷ் ஒரு கார் உள்ள காட்சி என்னை குழப்பி விட்டது அல்லது திருப்திபடுத்த வில்லை.

காரில் செல்பவனை பைக்கில் செல்பவன் கொல்லத் துரத்தும் போது காரினால் லேசாக இடித்தாலே பைக் கவிழ்ந்து விடுமே, அதை விடுத்து பயந்து செல்வது ஏன். 

மற்றபடி படம் பார்த்து ரசிக்கும்படியே உள்ளது.

படத்தில் கண்ணியம் குறைவான காட்சிகளே இல்லை என்பது படத்தின் மற்றுமொரு சிறப்பு.

என்னடா ஒரே குறைகளாகவே உள்ளதே என்று நினைக்க வேண்டாம். கண்டிப்பாக போரடிக்காமல் கொடுத்த காசுக்கு ஒர்த்தபிளான படம். நண்பரின் படம் என்பதால் சற்று அதிக உரிமை எடுத்துக் கொண்டேன்.

படத்தின் க்ளைமாக்ஸ் போது செல்வின் ஒரு ட்விஸ்ட் சொன்னார். படத்தின் க்ளைமாக்ஸை விட அது இன்னும் பெட்டராக தெரிந்தது. இருந்தாலும் அதை அவரே அவரது விமர்சனத்தில் சொல்வார் என நினைக்கிறேன்.

தலைவரே ஏதேனும் வார்த்தைகள் எக்குத்தப்பா இருந்தால் மன்னிச்சூ.

ஆரூர் மூனா


2 comments:

  1. வாழ்த்துக்கள்...

    "ஒரு ட்விஸ்ட்" அவர் தளத்திலும் சொல்லவில்லை...

    ReplyDelete
  2. மனதில் பட்டதை கூறுபவனே உண்மையான நண்பன். நீங்கள் அதைத்தான் செய்துள்ளீர்கள்...

    ReplyDelete