Friday, 30 January 2015

ஏதோ கிறுக்கினேன்

எப்போதும் தமிழில் தட்டச்சு செய்ய என்ஹெச்எம் ரைட்டர் பயன்படுத்துவேன் அல்லது அகப்பை தமிழ் ரைட்டர் என்னும் தளத்தில் தட்டச்சு செய்வேன். இரண்டுமே நான் நினைப்பதை அதே வேகத்தில் எழுத்தாக்கி விடும். வேகமாக தட்டச்சு செய்வதால் அரைமணியில் ஒரு பதிவு முடிந்து விடும். 


ஆனால் இப்போ அகப்பை தமிழ் ரைட்டர் தளம் இயங்கவில்லை. என்ஹெச்எம் ரைட்டர் சாப்ட்வேரில் ஏதோ பிரச்சனை, சரியாக இயங்கவில்லை. அதனாலேயே பதிவுகள் எழுத முடியாமல் போய் விட்டது. நம் சிந்தனையில் வருவது அரைமணிக்குள் பதியவில்லை என்றால் மறந்து போய் விடுகிறது.

ரொம்ப சிரமமாக இருக்கிறது. 

கூடுதலாக வசந்தமுல்லையின் அலும்புகள் இன்னும் படுத்துகிறது. தட்டச்சு  சிக்கலை தாண்டி வலுக்கட்டாயமாக பதிவெழுத நான் அமர்ந்தால் தாவி என் மடிக்கு வந்து அமர்ந்து தடால்புடால் என்று தட்டி கீபோர்டு, மவுஸ் எல்லாத்தையும் டேபிளில் இருந்து தள்ளி விடுகிறாள். 


அவள் தூங்கும் நேரம் தட்டச்சு செய்யலாம் என்றால் நான் வேலைக்கு போகும் நேரம் தூங்கி விட்டு நான் திரும்ப வந்ததும் எழுந்து குறும்புகளை ஆரம்பித்து விடுகிறாள். இரவு 11மணிக்கு தான் தூங்குகிறாள். கொடுமை என்னவென்றால் நான் 10.30க்கே கொட்டாவி விட்டு படுக்கையில் சாய்ந்து விடுகிறேன்.

ஆனாலும் சந்தோஷமாக அனுபவிக்கிறேன். வசந்தமுல்லையின் குறும்புகளுக்கு முன்னால் ப்ளாக்கும், பேஸ்புக்குமா பெருசு.

இப்போ காலை 11.30க்கு வேலை முடிந்து திரும்பும் பர்ஸ்ட் ஷிப்ட் கிடையாது. மதியம் 02.30க்கு உள்ளே செல்லும் செகண்ட் ஷிப்ட் வேலை. அதனால் படத்துக்கு செல்ல நேரம் உகந்ததாக இல்லை. அதனால் சினிமா விமர்சனமும் குறைவாகத்தான் இருக்கும்.

வாங்கிய புத்தகங்களை எல்லாம் படித்து முடித்தாகி விட்டது. படிப்பதற்கு புத்தகங்கள் இல்லாமல் கடுப்பாக இருந்தது. சரியான நேரத்தில் பிடிஎப் பார்மேட்டில் புத்தகங்களை எடுப்பதற்கு வசதியான வலைத்தளங்களை அறிமுகப்படுத்திய நண்பர் வழக்கறிஞர் ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி.

என் அப்பாவின் கடுமையான எதிர்ப்பினால் குறும்பட வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறேன். "வேகம் விவேகமல்ல", "விருச்சிககாந்த்" என்ற இரண்டு குறும்பட படபிடிப்புகளும் முடிந்து விட்டது. எடிட்டிங், டப்பிங், பின்னணி இசைக் கோர்ப்பு வேலைகள் பாக்கி இருக்கிறது.

ஊரில் படப்பிடிப்பு நடந்த நேரத்தில் நான் செய்த அலப்பறைகளை பார்த்தவர் "உனக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை, இப்பத்தான் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து மீண்டு வந்துள்ளாய். இப்போ சினிமா வேலையெல்லாம் தேவையா, இன்னொரு முறை படப்பிடிப்பு, சினிமா, அது, இது என்று என் காதில் விழுந்தது, முட்டியை பேத்துடுவேன்" என்று ஓவர் சவுண்டு விட்டார். அவர் வார்த்தைக்காக எல்லாத்தையும் சற்று நிறுத்தி வைத்துள்ளேன். பத்து நாட்களில் அவர் ஊருக்கு போன பின்னாடி தான் மற்ற வேலைகளை தொடங்க வேண்டும்.

தமிழில் தட்டச்சு செய்யும் நல்ல சாப்ட்வேரை கண்டறிந்த பிறகு வழக்கம் போல் பதிவுகள் வரும்.

ஆரூர் மூனா

12 comments:

 1. உங்களுக்கு ஏற்பட்ட இதே சிக்கல் எனக்கும் ஏற்பட்டது. எப்படி சரி செய்தேன் என்பது பற்றிய எனது கட்டுரையை நேரம் இருக்கும் போது, விருப்பம் இருந்தால் படித்துப் பார்க்கவும். நன்றி.

  என்னே கம்ப்யூட்டருக்கு வந்த சோதனை?
  http://tthamizhelango.blogspot.com/2014/12/blog-post_23.html

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக முயற்சி செய்து சரி பண்ணுகிறேன்

   Delete
 2. சந்தோஷமாக அனுபவிக்கிறேன். வசந்தமுல்லையின் குறும்புகளுக்கு முன்னால் ப்ளாக்கும், பேஸ்புக்குமா பெருசு.
  அதே,
  சர்வனுக்கு மவுஸ் தான் விளையாட்டு பொருள்

  ReplyDelete
  Replies
  1. அங்கேயும் அப்படித்தானா

   Delete
 3. //வசந்தமுல்லையின் குறும்புகளுக்கு முன்னால் ப்ளாக்கும், பேஸ்புக்குமா பெருசு.//
  உண்மை உண்மை
  வசந்த முல்லை அழகான் பேர் குட்டியின் குறும்புகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. transliteration method பயன்டுத்ஹ்டுகிரீர்கள் என்றால் கூகுள் இன்புட் டூல்ஸ் எளிதானது. ப்ளாக்கு ஒத்திசைவு கொண்டது. NHM Writer ஐ UNinstall செய்துவிட்டு மீண்டும் ரீஇன்ஸ்டால் செய்தால் இயங்கும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நான் ட்ரான்ஸ்லிட்டரேசன் முறையில் தட்டச்சு செய்வதில்லை. நேரடியாக தமிழில் டைப்புகிறேன்

   Delete
 5. NHM Writer - Windows XP SP3-ல் இயக்குவது கடினம். Phonetic -ல் வராது. ஒவ்வொரு முறையும் அன் இன்ஸ்டால் செய்து ரீ இன்ஸ்டால் செய்ய வேண்டி வரும். "அழகி" சாப்ட்வேரை முயற்சி செய்து பாருங்களேன். இந்த கமெண்ட் அழகி மூலம் தட்டச்சு செய்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. இன்ஸ்ட்டால் செய்து விட்டேன். ஆனால் நான் தங்கிலிஷ் டைப்பிங் பண்ணுவதில்லை

   Delete
 6. நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  ReplyDelete
 7. மகா தியானம் கூட பெரிசில்லை தானே...?

  ReplyDelete