Monday, 16 March 2015

ஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 4

சென்னையில் பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் இல் அப்ரெண்டிஸ்க்கான அப்ளிக்கேஷன் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. பத்தாவது படித்தவர்கள் இதற்கு தகுதியானவர்கள்.  மூன்று வருட காலம் அப்ரெண்டிஸ். பிட்டர், வெல்டர், கார்ப்பெண்டர், பெயிண்ட்டர், எலட்ரிசியன் போன்ற பிரிவுகள் இதில் உள்ளன. 


இதை படித்து முடித்ததும் நேரடியாக வேலை கொடுப்பார்கள் என்ற உத்திரவாதம் கிடையாது. ஆனால் டெக்னிசியன் வேலைக்கு விண்ணப்பித்து தேர்வெழுதி வெற்றிப் பெற்றால் வேலை கிடைக்கும். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது போன்ற அப்ரெண்டிஸ் வாய்ப்புகள், பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், ஐசிஎப், திருச்சி கோல்டன் ராக் போன்ற தொழிற்சாலைகளில் இருக்கிறது.

டெக்னிசியன் வேலைக்கு சேர்ந்ததுமே 25,000 ரூவாய் சம்பளம் கொடுப்பார்கள், வருடத்திற்கு 1000 என்ற அளவில் சம்பளம் உயரும். 2016ல் பே கமிசன் உள்ளது. அதன் பிறகு ஆரம்பகட்ட சம்பளம் 40,000 வரை உயரும் என்று சொல்கிறார்கள். பயன்படுத்திக் கொள்ளுங்கள். 


முன்பு ரயில்வே தொழிலாளர்களின் பிள்ளைகள் தான் இதை படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களும் மற்ற மாணவர்கள் போலவே இன்சினியரிங் நோக்கி நகர்ந்து விட்டதால் இப்போது வடஇந்தியர்கள் தான் அதிகமாக தென்படுகிறார்கள். 

நம்மாளுங்க இன்சிரினியரிங் படித்து ஐடி வேலைக்கு முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதை பொருட்படுத்தாமல் இருப்பதால் இந்த வாய்ப்புகள் வடஇந்தியர்களிடம் சென்று கொண்டு இருக்கின்றன.

இன்சினியரிங் படித்து எங்குமே வேலைகிடைக்காமல் கண்கெட்டபின்பு சூரிய நமஸ்காரமாய் கலாசி என்றழைக்கப்படும் கடைநிலை ஊழியர் வேலைக்கு விண்ணப்பிக்கும் லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். அரசு வேலைக்கு புத்திசாலித்தனமாய் காய் நகர்த்தினால் எந்த சிரமமும் இல்லாமல் வேலையை பெறலாம்.


இன்று ஆந்திராவிலும் வடஇந்தியாவிலும் இந்த வேலைக்கு நிறையபேர் ஐடிஐ, டிப்ளமோ படித்துவிட்டு ரயில்வே  வேலைக்கு விண்ணபித்து விட்டு அதற்காக குறைந்தது ஆறுமாதம் படித்து வேலையை பெற்றுவிடுகிறார்கள்.

இப்போ கூட எங்கள் ஒர்க்ஷாப்பில் வந்த 200 கலாசிகளில் மலையாளிகள் தான் மெஜாரிட்டி. நம்மவர்கள் வெகுசொற்பமே. அதற்கு முன் பேட்ச் டெக்னிசியன்களில் 99 சதவீதம் வடஇந்தியர்கள் தான். இந்த நிலை தொடர்ந்தால் கொஞ்ச நாட்களில் மொத்த  தொழிற்சாலையிலும் மெஜாரிட்டியாக மற்ற மாநிலத்தவர்கள் இருக்கப் போகிறார்கள்.

கிராமத்தில் படிக்கும் நிறைய மாணவர்கள் என்ன படிக்க வேண்டும், என்ன படித்தால் அரசு வேலை கிடைக்கும் என தெரியாமல் கிடைத்த படிப்பை படித்து தனியார் நிறுவனங்களில் சொற்ப சம்பளங்களுக்கு வேலைப் பார்க்கிறார்கள்.

90 சதவீதத்திற்கு மேல் மார்க் எடுப்பவர்களை விடுங்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. இந்த 60 சதவீத மார்க் எடுத்து சிரமப்படுகிறார்களே அவர்களுக்கான பொன்னான எதிர்கால வாய்ப்பு தான் இது.

ஒரு படிப்பு, மேற்கொண்டு ஒரு பரிட்சை அவ்வளவு தான். நீங்களும் ரயில்வேயில் டெக்னிசியன் தான். நான் அனுபவமில்லாமல் மற்றவர்களிடம் கேட்டு, அறியப் பெற்று இந்த தகவலை தரவில்லை. எல்லாம் சொந்த அனுபவம்.

நான் திருவாரூரில் 12 பொதுத் தேர்வு எழுதி தோல்வியடைந்து வெட்டியா சுத்திக்கிட்டு இருந்த போது, ஊரில் இருந்தால் நான் தேறமாட்டேன் என்று முடிவு செய்த அப்பா இந்த படிப்புக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

விருப்பமில்லாமல் வந்து நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்று ஐசிஎப்பில் அப்ரெண்டிஸ் 2000ம் ஆண்டு முடித்தேன். நான் படிக்கத் தொடங்கிய காலக்கட்டத்தில் அப்ரெண்டிஸ் முடித்ததுமே வேலை கொடுத்தார்கள். படித்து முடித்த காலக் கட்டத்தில் ரயில்வே நஷ்டத்தில் போனதால் வேலை கொடுப்பதை நிறுத்தி வைத்து விட்டார்கள். பிறகு 9 ஆண்டுகள் கழித்து தேர்வு எழுதி பாஸ் செய்து தான் இந்த வேலைக்கு வந்தேன்.

இப்போ வருடத்திற்கு ஒரு முறை ஆர் ஆர் பி மூலம் இந்த வேலைக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே அப்ரெண்டிஸ் முடித்தவர்களுக்கு இந்த வேலைக்கான பரிட்சை  எழுத அதிகப் பட்ச வயது 42, அதனால் இரண்டு, மூன்று முறை தோல்வியடைந்தாலும் அடுத்தடுத்து எழுதினால் கண்டிப்பாக தேர்ச்சியடைந்து விடலாம். 

நானே முதல் முறை எழுதிய தேர்விலேயே தேர்ச்சியடைந்து வேலைக்கான ஆணையைப் பெற்றேன் என்றால் மற்ற மாணவர்கள் சுலபமாக தேர்ச்சியடைவார்கள்.

என் குடும்பத்தில் நான் தான் முதல் மத்திய அரசு ஊழியன். இதற்கு நிகரான வசதிவாய்ப்பு உள்ள வேலை கிடையவே கிடையாது. சரியாக திட்டமிட்டு நீங்களும் உங்கள் பசங்களையோ, உறவினர்களையோ படிக்க வையுங்கள். வாழ்க்கையை அவர்கள் மாற்றி அமைப்பார்கள்.

ஆரூர் மூனா

13 comments:

 1. ம்... பிழைக்கத் தெரிந்தவர்கள் + புத்திசாலிகள்... உடனே முடிவு செய்து முன்னேறுபவர்கள்...

  ReplyDelete
  Replies
  1. சரியாத்தான் சொல்லியிருக்கீங்க டிடி, ஆனா நம்மாளுங்க கேக்கணுமே

   Delete
 2. நம்மவர்களுக்கு இப்போது ஐ டி மோகம் பிடித்து ஆட்டுகிறது. ஏ ஸி அறைக்குள் வெளியுலகம் காணாமல் வாழத்தான் பிடிக்கிறது. அழுக்கு வேலைகளெல்லாம் ஆவதில்லை. அதனாலதான் இத்தனை இன்ஜினீயரிங் காலேஜ்கள் குப்பைக் கொட்ட முடிகிறது.
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. அதென்னமோ சரிதான், நன்றி செந்தில்

   Delete
 3. I am doing B.E now, Railway work waste , only IT is the best. All girls marry IT guys. 25000 rupees not sufficient.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்தை படித்து தன்யனானேன். மிக்க நன்றி.

   Delete
 4. அன்பு ஆரூர் மூனா,
  IT வேலை கழுத்துக்கு மேல் கத்தி தொங்கி கொண்டிருக்கும் வேலை. நானும் IT யில் தான் இருக்கிறேன். எங்கப்பா சொன்ன மாதிரி ஸ்கூல் வாத்தியார் வேலைக்குப் போயிருக்கலாம்ன்னு 42 வயசுல யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.

  எனக்கு தெரிந்த பையன் காம்பசில் TCS வேலை கிடைத்தது. அவனுக்கு சுத்தமாக IT பிடிக்கவில்லை. 2 வருடம் contract முடிந்தவுடன் பேங்க் exam முக்கு படிக்க பிளான் பண்ணி படித்துக் கொண்டிருக்கிறான். IT மோகம் எல்லோரிடமும் இன்னமும் இல்லை புத்தியுள்ளவன் அரசு வேலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறான்.

  ReplyDelete
  Replies
  1. அந்த நிலை பரவலாக வரவேண்டும்

   Delete
  2. இது எப்டி தெரியுமா இருக்கு ... இந்தியா-ல நாலு பேரு rape பண்ணிடாங்கன்னு..இந்தியா-ல இருக்குரவீங்க எல்லா காட்டு மிராண்டீங்கன்னு சொல்ற மாதிரி . யோவ் ! அங்க கோடிக்கணக்குல நல்லா சம்பாதிச்சு..சந்தோசமா இருக்குற ஜனங்க உனக்கு தெரியலையா ?

   Delete
  3. தம்பி, கொண்டை தெரியுது, மறைச்சிக்கவும்

   Delete
 5. இன்றைய இளைகர்களுக்கு வழிகாட்டியாய் இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. பயனுள்ள இடுகை. மிக்கநன்றி

  ReplyDelete