Sunday, 3 May 2015

ஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 8

இன்னிக்கி தலைப்பு இப்படி வைக்கலாம். "இது உங்கள் சொத்து." ஏன்னா ரயில்பெட்டிகளில் வரும் கோளாறுகளில் 25 சதவீதம் தான் தொழிற்நுட்பக் கோளாறிலும், தேய்மானத்திலும் வரும். மிச்சக் கோளாறுகள் தனி மனிதனின் ஒழுக்கமின்மையால் தான் நேருகிறது.


தொலைதுர பயணங்களில் பல ஆண்களுக்கு சரக்கில்லாமல் பயணிக்கவே முடியாது. அப்படியே சரக்கை வாங்கி ரயிலில் மிக்ஸ் பண்ணி அடிக்க முடியாது. புத்திசாலிகள் வோட்காவை தண்ணீர் பாட்டிலில் கலந்து வைத்துக் கொண்டு ஒப்பனாகவே அடித்துக் கொண்டு வருவர்.

சில அப்பாவிகள் பெப்ஸியில் கலந்து வைத்திருப்பர். உண்மையிலேயே வெறும் பெப்ஸியை குடித்தால் கூட மிக்ஸிங் என ஊர் நம்பும் காலம் இது. எப்பப் பார்த்தாலும் ரயில்வே போலீஸ்கள் ரோந்து வந்துக் கொண்டே இருப்பர். உங்கள் கையில் பாட்டில் இருந்தாலோ அல்லது நீங்கள் சரக்கடித்து பயணம் செய்வதாக யாராவது கம்ப்ளைண்ட் செய்தாலோ அப்படியே உங்களை எழுப்பி கொண்டு போய் விடுவர்.

இந்த அப்பாவிகளாலும், புத்திசாலிகளாலும் ரயில்பெட்டிக்கு எந்த தொல்லையும் இல்லை. ஆனால் இன்னொரு ரகத்தினர் இருக்கின்றனர். அவர்கள் தான் அதிபுத்திசாலிகள். 


சரக்கு எதுவும் வாங்காமல் வெறும் கையோடு ரயிலேறும் இவர்கள் குவாட்டர் பாட்டிலை ரயிலிலேயே டீ விற்பவர்களிடம் நைச்சியமாக பேசி வாங்கி விடுவர். சரக்கை ப்ளாக்கில் விற்கும் ஒரு கும்பல் ரயில்களில் உண்டு. 

குடிக்க இடம் வேண்டுமே என்ன செய்வார்கள் தெரியுமா. பாத்ரூமுக்குள் நுழைந்து பாட்டிலை திறந்து ராவாக அடித்து விடுவர். பாட்டிலை வெளியே போட முடியாது. அதற்காக ஒரு குறுக்கு வழியை கையாளுவர்.

லாவட்டரியில் நான்கு புறமும் சுவர் மாதிரி LP Sheet (Laminated Plywood) ஆல் மூடப்பட்டு இருக்கும். டாய்லட் பேசின் ஒட்டிய எல்பி ஷீட்டில் ஒரு அடி சதுரத்தில் துளையிட்டு பிறகு அதன்மேல் சின்ன எல்பி ஷீட் துண்டால் மூடப்பட்டு இருக்கும். அதில் போடப்பட்டு இருக்கும் ஸ்ரூவை காயினால் கழற்றி பாட்டிலை வைத்து விட்டு காயினால் மூடி விட்டு நைசாக வெளியேறி விடுவர்.


மேலோட்டமாக பார்த்தால் பாதிப்பே இல்லாதவாறு தெரிகிறது அல்லவா. ஆனால் அது பெரிய வில்லங்கத்திற்கு வழி வகுத்திருக்கும். வெஸ்டிபுள் கதவு இருக்கிறது அல்லவா. அதனை உள்ளே தள்ளுவதற்காக வழியில் தான் இந்த அதிபுத்திசாலி பாட்டிலை வைத்திருப்பார். இரவு நேரங்களில் ஒரு கம்பார்மெண்ட்டிலிருந்து மற்றொரு கம்ப்பார்ட்மெண்ட் வருவதை தடுக்க வெஸ்டிபுள் கதவை லாக் செய்து விடுவர்.

பாட்டில் கதவு உள்ளே செல்லும் வழியில் வைக்கப்பட்டு இருப்பதால் மறுநாள் காலையில் கதவை திறக்க முடியாது. ஸ்டேசனில் இருக்கும் மெக்கானிக்குகளுக்கு இந்த சூட்சுமம் தெரியாது. இந்த ரிப்பேரை சரி செய்ய முடியாமல் நிரந்தரமாக அந்த கதவு மூடப்பட்டு விடும். ஒன்னரை வருடம் கழித்து எங்கள் தொழிற்சாலைக்கு வரும் போது கதவு பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதால் துருப்பிடித்து கண்டமாகி விடும்.


எங்கள் ஒர்க்சாப்பில் கதவை அப்படியே மூடி அனுப்ப முடியாது. அதை பழுது நீக்கி அனுப்பினால் தான் Fit கிடைக்கும். அதற்காக நல்லா இருக்கும். பாத்ரூமில் உள்ள LP Sheet முழுவதையும் உடைத்து என்ன பால்ட்டு என்று பார்க்க வேண்டும். கதவு துருப்பிடித்து பொத்தல் பொத்தலாக இருப்பதால் அதனையும் மாற்ற வேண்டும்.

ஒரு அதிபுத்திசாலியின் சாதாரண செயல் தேவையே இல்லாமல் மேன்பவர் வரை சேர்த்து 25000 ரூபாயிலிருந்து 50000 ரூபாய் வரை இந்த பழுதை நீக்க செலவு பிடிக்கும்.

அது போல் பர்மணன்ட் மார்க்கரில் டாய்லட் சுவர்களில் எழுதப்படும் ரகசிய பாலியல் கமெண்ட்டுகள். பல மாதங்கள் கழித்து அதனை அழித்தாலும் அது முற்றிலும் மறையாது. அதற்காகவே அந்த LP Sheetஐ மாற்ற வேண்டும். சில அறிவாளிகள் பயணம் முடிந்து போகும் போது சீட் கவரை பிளேடு போட்டு போவார்கள்.

சாப்பிட்ட மிச்சப் பொருளை பெர்த்தின் அடியில் திணித்து வைத்தால் எலிகள் ரயில்பெட்டிகளில் உள்ளே நுழையத்தானே செய்யும். 

நான் இங்கே குறிப்பிட்ட குறைகள் வெகு சொற்பமே. நம்ம ஆட்களின் அராஜகத்திற்கு அளவே கிடையாது.

கூடுதல் தகவலாக சொல்வதென்றால், டாய்லட் போனால் தண்ணி ஊத்தக் கத்துக்கங்கப்பா, ப்ளஷ்ஷை அமுக்குவதில் உனக்கு என்ன பிரச்சனை. அதே போல் எச்சி துப்புவதாக இருந்தால் வெளியே துப்பு, அதென்ன வெஸ்டிபுள் ரப்பர் பகுதியில் துப்புவது. அதை கையால் கழுவுபவன் கூட மனிதன் தான் என்பது ஏன் உன் நினைவுக்கு வர மாட்டேங்குது.

எல்லாவற்றிலும் உச்சமாக.

ஐசிஎப்பில் பெட்டிகள் தயாரிக்கும் போது தென்மாநிலங்களில் போகும் ரயில்பெட்டிகளுக்கு Lavatory Inlayவை(அதாவது டாய்லட் பேசின்) Stainless Steelலிலும் வடமாநிலங்களுக்கு போகும் ரயில் பெட்டிகளுக்கு Lavatory Inlayவை தார்ப்பாலின் மெட்டிரிலியலிலும் போட்டு அனுப்புவர்.

எதற்கென்றால் பீகார் போன்ற மாநிலங்களில் பயணமாகும் ரயில்பெட்டிகளில் Lavatory Inlay (அதாவது டாய்லட் பேசின்) Stainless Steelலில் இருந்தால் அதனை பெயர்த்து எடுத்து, இன்னும் விளக்கமாக சொல்லனும் என்றால் பல வருடங்கள் பயன்பாட்டில் இருந்த Lavatory Inlayவை வெட்டி எடுத்து அதில் ஸ்பூன்கள் செய்து விற்பனைக்கு அனுப்பி விடுவார்களாம்.

நான் டெல்லியில் இருந்த காலக்கட்டத்தில் ஸ்பூனில் சாப்பிடும் போதெல்லாம் இது நினைவுக்கு வந்து தொலைக்கும்.

ஆரூர் மூனா

11 comments:

 1. பயங்கரமான அராஜகம்.

  ஸ்பூன் தகவல் ஐயோ...!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதாங்க டிடி.

   Delete
 2. ப்ளஷ் செய்வதில் என்ன கஷ்டம் ....டெல்லிக்கு செல்லும் GT...TN...எக்ஸ்பிரஸ் வண்டிகளில் பயணித்து விட்டு சொல்லுங்கள் ...நாங்களா ப்ளஷ் செய்வதில்லை ...அதை செய்வதற்கு தண்ணி நிரப்ப பட வேண்டும் ....எத்தனை முறை ரயிலில் பயணம் செய்யும் இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்துள்ளேன் தெரியுமா ? ஒரு நாளும் சரியான பதில் கிடைத்ததில்லை .

  ReplyDelete
  Replies
  1. அப்படி இல்லைங்க. டேங்க் கெப்பாசிட்டின்னு ஒன்னு இருக்கு. சென்ட்ரலில் தண்ணீர் நிறைத்து வைத்தால் விஜயவாடாவில் காலியாகி விடும். அங்கு நிரப்ப வேண்டும். பிறகு நாக்பூர் என கணக்கு இருக்கு. எல்லா இடங்களையும் தமிழ்நாடு போல நினைக்க முடியாது இல்லையா.

   Delete
 3. I am constantly reading this article ji, very good and informative. Keep writing.

  ReplyDelete
 4. I am reading your posts regularly.. Good information and write up.. Keep Writing ji...

  ReplyDelete
  Replies
  1. நன்றி பார்த்திபன்

   Delete
 5. //பாட்டில் கதவு உள்ளே செல்லும் வழியில் வைக்கப்பட்டு இருப்பதால் மறுநாள் காலையில் கதவை திறக்க முடியாது//

  பாட்டிலை உள்ளே வைக்க முடியாத அளவு டிசைன் செய்வது என்ன அவ்வளவு சிரமமா? அல்லது 250 ரூபாய்க்கு ஒரு டிராஷ் கேனை வைப்பது முடியாத காரியமா என்ன?

  ReplyDelete
  Replies
  1. அய்யா, அந்த பாட்டில் வைக்குமளவுக்கு இருக்கும் துளை எல்பி ஷீட்டுக்கு அந்த பக்கம் இருக்கும் எலட்ரிக்கல் ஒயர் மெயிண்டனென்ஸ்க்காக இருக்கும். எலக்ட்ரிகல் பிரச்சனை ஏற்பட்டால் அந்த சின்ன எல்பி ஷீட்டை கழற்றி பழுது பார்ப்பதற்காக அந்த வசதி இருக்கிறது. இப்ப வரும் பெட்டிகளில் டஸ்ட்பின்கள் வைக்கப்படுகின்றன. வெளியில் உள்ள வாஷ்பேசின் கீழ்ப்பகுதியிலும் வெஸ்டிபுள் பகுதிகளிலும் இருக்கிறது. ஆனால் அதில் போட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருக்க வேண்டும்.

   Delete
 6. //ஆனால் அதில் போட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருக்க வேண்டும்// உண்மைதான், நன்றி.

  ReplyDelete