Tuesday, 12 May 2015

இளையராஜா பாடல்கள்

இளையராஜா பாடல்கள் ஏன் எனக்கு பிடிக்கும்ன்னு யோசிச்சிப் பார்த்தேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம். அவரின் காம்போசிஷன், ராகம், மெட்டு, இசைக்கருவிகளை பயன்படுத்திய விதம் என எல்லோருக்கும் காரணம் உண்டு.


சிவரஞ்சனியை ஆலாபனை பிடிச்சி சிந்து பைரவி மிக்ஸில போட்டு அடிச்சி ரெண்டையும் கலந்தா கிடைக்கிறது காம்போதியா கரகரப்பிரியாவா என்றெல்லாம் எனக்கு சொல்லத்தெரியாது. இத்தனைக்கும் கர்நாடக சங்கீத சக்கரவர்த்திகளான மும்மூர்த்திகள் தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் பிறந்த ஊரில் பிறந்தவன், வளர்ந்தவன் நான்.

மருந்துக்கு கூட கர்நாடக சங்கீதம் பக்கம் வந்ததேயில்லை. நான் மட்டும் இல்லை. திருவாரூரில் வாழ்ந்த, வாழும் இளைஞர்களில் 99.9 சதவீதத்தினர் இப்படித்தான். ஒரு பொக்கிஷம் தன் பக்கத்தில் இருந்தால் யாருக்குமே அதன் அருமை தெரியாதாம்.


திருப்பதி மலை மீது யாரும் சரக்கடிக்கவோ, தம்மடிக்கவோ கூடாது என கடும் கட்டுப்பாடுகள் உண்டு என அனைவருக்குமே தெரியும். ஆனாலும் அங்கு  தம் கிடைக்கும், கோயில் பணிபுரியும் பலர் மற்றும் ரெகுலர் ட்ரிப் அடிக்கும் டிரைவர்கள் அந்த இடத்திற்கு வந்து அந்த லாகிரி வஸ்துவை பயன்படுத்தி செல்வதும் இந்த கேட்டகிரியில் தான் வரும்.

வேளாங்கண்ணியில் உள்ள மாதாவை தரிசிக்க பலரும் பெங்களூரு, கேரளா போன்ற பகுதிகளில் இருந்து நடந்தே வருவதுண்டு. அந்த அளவுக்கு கிறிஸ்துவர்களுக்கு புனிதமான இடம் அது.

ஆனால் வேளாங்கண்ணியை சுற்றியுள்ள நகரங்களில் வசிப்பவர்களுக்கு வேளாங்கண்ணி ஒரு விபச்சார விடுதி அவ்வளவே. அந்தளவுக்கு வேளாங்கண்ணியில் உள்ள சுமார் ரக விடுதிகளில் வருடத்தின் அனைத்து நாட்களிலும் இந்த சர்வீஸ் கிடைக்கும். இது எல்லா வாலிபப் பசங்களுக்கும் தெரியும்.


சரி சரி போதும். எங்கேயோ ஆரம்பிச்சி எங்கேயோ போயிட்டேன். இத்தோட நிறுத்திக்குவோம். பேக் டூ தி கட்டுரை.

மேற்சொன்ன உதாரணங்கள் போலத்தான், திருவாரூரில் உள்ள இளைஞர்கள் அந்த கர்நாடக சங்கீதம் பக்கம் தலையை வைத்து படுப்பதே இல்லை. 

இளையராஜாவைப் பிடிக்க என்ன காரணம் என யோசித்துப் பார்த்தால் என்னுடைய எல்லா மறக்க முடியா நினைவலைகள் எல்லாவற்றிலும் அவருக்கும் பங்கிருப்பது தான் என விளங்கியது.

எனக்கு பயணிக்க மிகவும் பிடிக்கும். எல்லா ரக பயணங்களும் தான்.  மன்னார்குடி - பட்டுக்கோட்டை வழித்தடத்தில் தனியார் பேருந்தில் பயணிப்பது கூடுதல் மகிழ்ச்சியை தரும். ஜன்னலோரம் அமர்ந்து தபேலாவை பேஸாக வைத்து இசையமைக்கப்பட்ட இளையராஜாவின் பாடல்களை கேட்டுக் கொண்டே பயணிப்பது போன்ற சுகத்தை வேறு எங்குமே அனுபவிக்க முடியாது.


புதுநெல்லு புதுநாத்து, சின்னத்தம்பி படம் வந்த காலக்கட்டத்தில் என் அத்தைப் பெண்ணுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அவள் என்னை விட வயதில் பெரியவள், அவள் தங்கை என்னை வசீகரிக்க முயற்சித்தாள். அப்போ எங்களின் பார்வை கலக்கும் தருணங்களில் எல்லாம் பேக்ட்ராப்பில் இந்த இரு படங்களின் பாடல்கள் தான் ஓடிக் கொண்டு இருக்கும். இன்றும் இந்த படப் பாடல்கள் எங்கு ஒலித்தாலும் என் நினைவுகள் அந்த நாட்களுக்கு பயணமாகி விடும்.

செம்பனார்கோவில் அருகே இருந்த கிராமத்தில் நண்பனின் தங்கை திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்கச் சென்ற சமயத்தில் ஒரு பெண்ணிடம் சில மணித்துளிகள் பேச நேர்ந்தது. அப்போ எங்கோ நடந்த கோவில் திருவிழாவில் ஒலித்தவை அரண்மனைக் கிளி படப் பாடல்கள். 

9ம் வகுப்பு படிக்கும் போது நான் என்சிசியில் சேர்ந்திருந்தேன். என்னுடன் என்சிசியில் இருந்த சக நண்பர்கள் எல்லாம் ஒரு கேம்ப்புக்காக பாண்டிச்சேரி வரை பேருந்தில் பயணித்தோம். அதில் ஒருவனின் பெயர் பழனிச்சாமி. அந்த பேருந்தில் திருமதி பழனிச்சாமி படப் பாடல்கள் திரும்ப திரும்ப பயணம் முடியும் வரை ஒலித்துக் கொண்டு இருந்தது. அவனை கிண்டல் செய்து கொண்டே கேட்டு ரசித்த பாடல்கள், என் விருப்பமானவை போல்டரில்  வந்து விழுந்து விட்டது. அதிலும் முக்கியமாக நடுசாமத்துல சாமந்திப்பூ ஆள அசத்துது என்ற பாடல் இன்று வரை என் உச்சபட்ச விருப்பம்.

இப்படி சில பயணங்கள், சில பெண்களின் நட்புகள், மறக்க முடியா உறவினர்களின் நேசங்கள்  என எல்லாவற்றிலும் இளையராஜாவின் பாடல்கள் ஒளிந்து கொண்டு இருப்பதால் தான் அவருக்கும், அவரின் பாடல்களும் ரசிகனாக இருக்கிறேன்.

ஒரு முறை திருப்பதியிலிருந்து திருவாரூர் வரை காரை செலுத்த வேண்டிய கட்டாயம். இரவு முழுவதும் தெலுகு நண்பர்களுடன் ரேணிகுண்டாவில் மகாதியானத்துடன் கூத்தடித்ததால் காலையில் கண்ணை கொண்டு சொருகுகிறது. இரவுக்குள் ஊருக்கு திரும்பியாக வேண்டும்.

ஒரு சிடியில் நடுசாமத்துல சாமந்திப்பூ ஆள அசத்துது பாடலை மட்டும் ரெக்கார்டு செய்து எடுத்துக் கொண்டு வண்டியை முடுக்கினேன். கொஞ்சம் கூட சோர்வடையாமல் அந்த ஒரு பாடலை மட்டும் கேட்டுக் கொண்டே வண்டியை விரட்டி மாலையே திருவாரூர் வந்து சேர்ந்தேன். 

இளையராஜா இசைஞானி மட்டுமல்ல இசை மந்திரவாதியும் கூட.

ஆரூர் மூனா

8 comments:

 1. அட...! உங்களையும் அசத்தி விட்டதா...?

  பல ஊர்களின் "பெருமையை" இன்று தான் அறிந்தே கொண்டேன்...!

  ReplyDelete
 2. நண்பா இதெல்லாம் சற்று நீண்ட பதிவாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும் நீங்க மட்டும் திருப்பதி யில் இருந்து பாட்டு கேட்பீங்க ஆனா எங்களுக்கு பாட்டுக்கு பதில் பிட்டுதான் போட்டீங்க . நேரமிருப்பின் இளயராஜா பாடல்களுடன் உங்கள் பயண அனுபவம் நீண்ட தொடராக எழுத முயற்சிக்கவும் . நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இதை சுருக்காக முடிக்க நேரமின்மையே காரணம். இதை பற்றி குறைந்தது 10 அத்தியாங்கள் உள்ள தொடராக எழுத முயற்சிக்கிறேன் நன்றி நண்பா.

   Delete
 3. அனைவருக்குள்ளும் ஓர் இசை அனுபவத்தை விட்டுச் சென்றிருக்கிறார் இசைஞானி
  நேரமிருப்பின் வாசியுங்கள் தோழர்! இது எனதனுபவம்
  http://arumbithazh.blogspot.in/2015/05/blog-post_7.html

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக வாசிக்கிறேன்

   Delete
 4. இளையராஜாவின் இசை தனிப்பயணம் போல சுவாரசியமும் சிந்தனைச் செதுக்களும் கொண்டவை. சில ஊர் பற்றி இன்றுதான் அறிகின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்னது சரிதான்.

   Delete