Thursday, 14 May 2015

பாலகிருஷ்ணாவின் லயன் - தெலுகு சினிமா விமர்சனம்

துணிச்சல் என்பது சாதாரணப்பட்ட காரியமல்ல. வெறும் வாயில ஆயிரம் வடை சுடலாம். சிக்கலான காரியத்தை சந்திக்கும் போது தான் வீரம் வெளியே வரும். பாலகிருஷ்ணாவின் படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்ப்பது கூட அந்த ரகத்தை சேர்ந்தது தான்.

இந்த மாதிரி ரிஸ்க்குகளை எடுக்கும் அதி தீவிர துணிச்சல்காரன் மெட்ராஸ்பவன் சிவாவுடன் இணைந்து நானும் ரஸ்க் சாப்பிட தயாரானேன். அந்த நேரம் பார்த்து நம் பேஸ்புக் நண்பர் ஸ்ரீராம் மங்களேஸ்வரன் சாட்டில் படம் பற்றிய விவரங்களை விசாரித்தார். 

நானும் சிவாவும் தியேட்டரில் போய் அமர்ந்த பத்து நிமிடத்தில் ஸ்ரீராம் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்த படம் பார்ப்பதற்காக கோடம்பாக்கத்திலிருந்து வில்லிவாக்கம் வந்திருந்தார் ஸ்ரீராம். படாதுணிச்சல்காரன் தான்.

படத்தின் கதையை ப்ளாட்டாக சொன்னால் சுவாரஸ்யமாக இருக்காது. எந்த காலத்திலும் இந்த படம் தமிழில் வராது என்ற காரணத்தால் படத்தின் கதையை க்ளியர் கட்டாக சொல்லாம்.


முதல் காட்சியில் மும்பை அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் டெட் பாடிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு எலி உள்ளே வந்து ஒரு டெட்பாடியின் காலைக் கடிக்கிறது. அதில் இருந்து ரத்தம் வழிகிறது. அந்த பிரேதம் சட்டென எழுகிறது. அவர் தான் நம்ம NBK எனும் பாலைய்யா எனும் நந்தமூரி பாலகிருஷ்ணா. 

எழுந்தவருக்கு தான் யார் என்று சரியாக விவரம் தெரியவில்லை. கோமாவிலிருந்து கண் விழித்த கோட்சே என்ற பெயர் கொண்ட பாலகிருஷ்ணாவை அப்பா சந்திரமோகன், அம்மா ஜெயசுதா ஆரத்தழுவி பாசம் காட்டுகிறார்கள்.


ஆனால் அவர்கள் தன் அப்பா அம்மா இல்லை எனவும் தன் பெயர் போஸ் என்றும் பாலகிருஷ்ணா கூறுகிறார். ஆனால் ஆதாரங்கள் கோட்சே என்ற பெயரிலேயே இருக்கிறது. கோட்சே ஒரு கம்பெனிக்கு சிஈஓவாக இருக்கிறார். ராதிகா ஆப்தே தான் கோட்சேக்கு மனைவி.

தலையில் யாரோ அடித்து பலத்த காயத்தை ஏற்படுத்தியதால் கோமாவுக்கு சென்றிருக்கிறார் பாலகிருஷ்ணா. அவருக்கு கடந்த காலங்கள் சரியாக நினைவில் இல்லை.

மருத்துவமனையில் இருந்து யாரிடமும் விவரம் கூறாமல் ரயிலேறி ஐதராபாத் வருகிறார். அங்கு கீதாவை தன் அம்மா எனவும் சலபதி ராவ்வை தன் அப்பா எனவும் த்ரிஷாவை தன் காதலி என்றும் கூறுகிறார்.


ஆனால் அவர்கள் பாலகிருஷ்ணாவை தெரியாது என கூறி விடுகிறார்கள். அதற்குள் சந்திரமோகனும் ஜெயசுதாவும் வந்து சேர டிஎன்ஏ டெஸ்ட் நடக்கிறது. சந்திரமோகனும் ஜெயசுதாவும் தான் அப்பா அம்மா என்று உறுதியாகிறது. 

மருத்துவமனையில் ஸ்ராவனை பார்க்கும் பாலகிருஷ்ணா தன்னை தலையில் அடித்து வீழ்த்தியது நீதானே என்று கேட்கிறார். ஆனால் அவரோ தனக்கு வலது கை இல்லை என்று காண்பித்து சென்று விடுகிறார்.

இருந்தாலும் உண்மையை ஏற்க சங்கடப்படும் பாலகிருஷ்ணா அவர்களுடனே அரைமனதுடன் மும்பை புறப்படுகிறார். கிளம்பும் முன் கீதாவையும் சலபதி ராவ்வையும் பார்த்து மன்னிப்பு கேட்க வருகிறார். 

அங்கு நடக்கும் தகராறில் வில்லன் ஆட்கள் பாலகிருஷ்ணாவை அடித்து வீழ்த்த பாசம் தாங்காமல் கீதா, நீ தாண்டா என் மகன் போஸ் என்று சொல்லி விட அதுவரை மறைவில் இருந்து வந்த வில்லன் டீம் வெளியில் வந்து விடுகிறது.அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார் பாலைய்யா.

டண்டணடண்டணடண்....

பாலகிருஷ்ணா யார். அவரை யார் இப்படி செய்தார்கள். வில்லன் யார் என்பதை விளக்கமாக சொல்லியிருக்கும் படம் தான் லயன்.

கதையாக கேட்கும் போது சரியான ஆக்சன் படம் என்று தான் தோன்றும். சீனுக்கு சீன் படத்தின் டெம்போ ஏறிக் கொண்டே இருக்கும். பாலகிருஷ்ணாவின் இமேஜிற்கு மணிமகுடமான கதை தான். 

ஆனாலும் அங்கங்கே லேக் ஆகி ஜெர்க் அடிப்பது தான் படத்தின் மைனஸ். எனக்கே சில இடங்களில் கொட்டாவி வந்து விட்டது.

மற்றபடி பாலகிருஷ்ணாவின் ரசிகர்களுக்கு படம் பலேகா அதிரிந்தி. லாஜிக் பார்க்காவிட்டால் நமக்கு கூட சுமாரான எண்டர்டெயினர் தான்.

படத்திற்கு வேறு யாருமே வேண்டாம். பாலைய்யா, பாலைய்யா, பாலைய்யா போதும். என்னா டான்ஸ், என்னா பஞ்ச் டயலாக், என்னா ஆக்சன், என்னா செண்ட்டிமெண்ட். என்னா லவ். தலைவா நீ இன்னும் பத்து வருசத்துக்கு ஓயாமல் படங்களா நடித்து கொடுத்துக் கொண்டே இரு. நாங்கள் ரசித்துக் கொண்டே இருக்கிறோம்.

த்ரிஷா ராதிகா ஆப்தே என இரு லட்டுகள். தெலுகு படங்களின் பார்முலாப் படி இருவருடன் சேர்ந்த ஒரு குத்தாட்டமும் உண்டு. வேறென்ன வேண்டும். கண்ணு ரெண்டும் வெளியில தொங்கி உள்ள போகிறது.

எம்.எஸ். நாராயணன் காலமான பிறகு வந்துள்ள படம். பார்க்கும் போது மனது கனக்கிறது. ஆலி சில காட்சிகள் மட்டும் வந்து விட்டு போகிறார்.

மற்றபடி சொல்றதுக்கு எல்லாம் ஒன்னும் இல்லை. முடிஞ்சா படம் பாருங்க. இல்லைனா இந்த விமர்சனத்தை படிச்சிட்டு படம் பார்த்த மாதிரி பீல் பண்ணிக்கங்க.

பேஸ்பால் ஷாட் தெரியுமா. அந்த ஸ்டைல்ல தலைவர் இரண்டு வில்லன்களை அடித்து வீழ்த்துகிறார் பாருங்க. கொடுத்த காசு அதுக்கே செரிச்சிப் போச்சி. மத்ததெல்லாம் போனஸ் தான்.

தலைவா நீயெல்லாம் இந்நேரம் சீமாந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு சிஎம் ஆகியிருக்கனும். மச்சான்கிட்ட லைட்டா அசந்துட்ட. இப்பக்கூட ஒன்னும் ஆயிடலை. இப்ப இம் சொல்லு, உன்னை ரெண்டு மாநில சிஎம்மாக்க தமிழ்க்காரனே துடிச்சிக்கிட்டு இருக்கான். தெலுகுகாரனைப் பத்தி சொல்லவா வேணும்.

படம் பார்த்துட்டு இன்னிக்கி மதியம் நான் சாப்பிடவேயில்லை. தியேட்டரிலேயே திருப்தியான அறுசுவைகளும் கிடைத்துவிட்ட பிறகு எதுக்கு சாப்பாடு.

ஆரூர் மூனா

4 comments:

 1. Super boss had a nice time with you

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக, உங்களை சந்தித்தது எனக்கும் மகிழ்ச்சியே

   Delete
 2. ரொம்பவே "பீல்" பண்றேன் - உங்களை நினைத்து...!

  ReplyDelete
  Replies
  1. இந்த பீலிங் பத்தாது. தலைவரே, இன்னும் இன்னும் எதிர்பாக்குறேன்

   Delete