Tuesday, 26 May 2015

Monday, October 15, 2012 பஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும் - பழசு 2012

மாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடிந்தது. நேற்று என் பெரியப்பா, என் ஒன்று விட்ட தங்கை, அவள் கணவர் மற்றும் குழந்தை ஆகியோர் வந்திருந்தனர்.

பகல் முழுவதும் நேரம் செலவழித்து விட்டு மாலை கிளம்பும் நேரம் மாற்றான் பற்றிய பேச்சு கிளம்ப அவர்களும் பார்க்க வேண்டும் என்று கூற என் இல்லாளோ என்னையும் கிளம்பச் சொல்லி நச்சரிக்க வேறு வழியில்லாமல் நேற்று இரவு காட்சி இரண்டாவது முறையாக அந்த தண்டனையை மறுபடியும் அனுபவிக்க நேர்ந்தது. ஆனால் கூட்டம் கொஞ்சம் கூட குறையவில்லை.

அம்பத்தூர் ராக்கி காம்ப்ளக்ஸில் உள்ள ராக்கி, மினிராக்கி, சினிராக்கி் லட்சுமிராக்கி ஆகிய நான்கு திரையரங்கிலும் நேற்று மாற்றான் தான். நேற்று பகல் மற்றும் மாலைக்காட்சிக்கான டிக்கெட் நேற்று முன்தினமே விற்றுத் தீர்ந்து விட்டது. இரவு காட்சிக்கு டிக்கெட் எடுத்து சென்றால் கூட்டம் கன்னாபின்னாவென்று அலைமோதியது.

மற்றவர்களெல்லாம் படம் பார்க்கப்போற சந்தோஷத்தில் இருக்க எனக்கு மட்டும் கூடுதலாக தலையை வலித்தது. நேற்று முன்தினம் வரை எந்த எந்த காட்சிகள் இழுவை என்று நாம் பட்டியலிட்டோமோ அனைத்தையும் வெட்டி விட்டனர். வோல்கா அறைக்கு சென்று சூர்யாவின் தந்தை மிரட்டும் காட்சி, தாரா தன் கணவனுக்கு எனர்ஜியான் கலந்து காப்பி தரும் காட்சி, உக்வேனியாவில் உரக்கம்பெனிக்கு சென்று அதன் முதலாளியை மிரட்டும் காட்சி, ராணுவ மேஜரை சூர்யா துப்பாக்கியால் மிரட்டும் காட்சி ஆகியவற்றை வெட்டி எறிந்து விட்டனர்.

அதனால் படத்தில் சற்று தொய்வு குறைகிறது. ஆனாலும் இரண்டாம் முறை படத்தை பார்த்த கடுப்பு கொஞ்சம் குறையவில்லை. எனக்கு மட்டும் ஏண்டா மாதவா இந்த மாதிரியெல்லாம் நடக்குது.
---------------------------------------------------------------------

என்னை மாதிரியே திங்கிறானுங்களே

----------------------------------------------------------------

நேற்று காலை அபூர்வமாக ஒரு சம்பவம் நடந்தேறியது. திருவாரூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1996 - 97 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு படித்தேன். அதில் என்னுடன் படித்த பெரும்பாலான நண்பர்கள் என்னுடன் தொடர்பில் இல்லை. அதில் முக்கியமானவர்கள் அம்மையப்பன் பாலாஜி, தினேஷ், மஞ்சரொட்டி விஜயன், காட்டான் அருண்குமார்.

படிப்பு முடிந்ததும் சில வருடங்கள் மட்டுமே தொடர்பில் இருந்த இவர்கள் சில வருடங்களில் சுத்தமாக தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்று விட்டனர். சில வாரங்களுக்கு அவர்கள் அனைவரும் பேஸ்புக்கின் மூலமாகவும் கூகிள் பிளஸ் மூலமாகவும் என்னை கண்டுபிடித்து தொடர்புக்குள் வந்தனர்.

ஆனால் அனைவரும் ஆளுக்கொரு நேரத்திற்கு இணையத்திற்குள் வந்ததால் சாட் செய்யவோ பேசவோ முடியவில்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் நேற்று அனைவரும் ஒரு சேர என்னுடன் சாட்டில் வந்து பிறகு போனிலும் நெடுநேரம் பேசிக்கொண்டோம்.

இதில் பாலாஜி அமெரிக்காவில் புரூக்ளினில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறான். அருண் சிங்கப்பூரில் மரைன் இன்ஜினியராக இருக்கிறான். தினேஷ் சீனாவில் சாப்ட்வேர் தொழிலை சொந்தமாக நடத்திக் கொண்டு இருக்கிறான். விஜயன் ஏற்றுமதி தொழிலில் திருவாரூரிலேயே இருக்கிறான்.

ஒரு மணிநேரம் அனைவருடனும் அளவளாவிய பிறகு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதிலும் நாங்கள் அந்த காலக்கட்டத்தில் எப்பொழுதும் மலையாள பிட்டு படம் பார்க்கப் போகும் செங்கம் திரையரங்கை பற்றி பாலாஜி சிலாகித்து கூறியதும் ரொம்ப நேரத்திற்கு சிரித்தேன். அவன் இருக்கும் பொசிசனுக்கு இன்னும் பழசை மறக்காத பாங்கு என்னை ரொம்பவே வியக்க வைத்தது.

இதைப் பார்த்து கடுப்பான இல்லாள் என்னுடன் பேசச்சொன்னால் வார்த்தை வரவே மாட்டேங்குது, ஆனால் நண்பர்களுடன் பேசும் போது மட்டும் சத்தம் கிழியுது என்று சைடில் வாரிக் கொண்டு இருந்தாள். எல்லா சந்தோஷங்களும் நிமிடத்தில் அடங்கியது. அட ஆண்டவா ஆட்டுக்கு வாலை அளந்தா வைப்பாங்க.
----------------------------------------------------------------

ஒளிரும் இந்தியா - தமிழ்நாடு தவிர

--------------------------------------------------

இப்ப இணைத்தில் கவிதைகாற்று வீசுகிறது போல. அவனவன் கவிதைங்கிற பேரில் கொன்னுக்கிட்டு இருக்கான். ஒரு வாக்கியத்தை மடக்கி மடக்கி அடிச்சா கவிதைன்னு சொன்னவன் எவன்னு தெரியல. கிடைச்சான் மவனே அவன் சங்க கடிச்சி துப்பியிருப்பேன். சாம்பிளுக்கு நம்ம வீடு சுரேசு கக்கிய கவிதை இலக்கியமோ இலக்கியம்.

விட்டா என்னையும் கவிஞனாக்கிடுவானுங்க போல. இதையெல்லாம் சமீப காலத்துல துவக்கி வச்சது லக்கிலுக் யுவகிருஷ்ணா தான்னு நினைக்கிறேன். ஏதோ ஒரு லுலல்லாயிக்கு பெரியவர் கவிதைய எடுத்து உல்டா அடிக்க ஆளாளுக்கு இதையே புடிச்சிக்கிட்டு தொங்குறானுங்க.

விட்டுத் தொலைங்கடா டேய். இதப் படிச்சிபுட்டு தூக்கத்துல கெட்ட கனவா வந்து அலறிகிட்டே எந்திரிக்க வேண்டியிருக்குது. இது தொடர்ந்தா மொக்க கவிதைகள் வெளியிடப்படும் பதிவுகளில் ஆங்கில கவிதை எழுதும் பவர் ஸ்டார் நக்கீரனை வைத்து பின்னூட்ட கவியரங்கம் நடத்தப்படும் என்பதை கூறி எச்சரிக்கின்றேன்.

 
ஆரூர் மூனா

No comments:

Post a comment