Tuesday, 10 November 2015

தூங்காவனம்

படத்தின் ஒரு காட்சியை பார்த்து நான் மிகவும் வருந்தினேன். மனசு வலித்தது. ஆம் நம்புங்கள் கமலுக்கு வயதாகி விட்டது. இன்டர்வெல் காட்சியில் கமல் கதவை தட்டும் போது கையின் தசைகள் தளர்ந்து கமலுக்கு 60க்கும் வயதாகி விட்டது என்பதை உறுதி படுத்துகிறது. ஆனால் அந்த காட்சியை தவிர வேறெங்கும் கமலுக்கு நாற்பதுக்கு மேல் மதிப்பிடவே முடியாது. அந்தளவுக்கு ஆக்சனில் பின்னியிருக்கிறார்.


இப்பல்லாம் சினிமாவுக்கு விமர்சனம் எழுதும் போது தன்னிலை விளக்கம் கொடுப்பது மிகவும் முக்கியமாக படுகிறது. வேதாளத்திற்கு மனதில் பட்டதை எழுதப் போக காலையில் இருந்து ட்விட்டர், வாட்ஸ் அப், பேஸ்புக் எல்லாத்திலும் என் தலை கிடந்து உருள்கிறது. நான் அஜித்தின் எதிர்ப்பாளனாம். அவர் படத்திற்கு எதிர்மறை விமர்சனம் எழுதி அவர் மதிப்பை குறைக்க பார்க்கிறேனாம்.

நான் ரஜினி ரசிகன், அதி தீவிர ரசிகன். ரஜினியை பூஜிக்கும் ரசிகன், ஆராதிக்கும் ரசிகன். அதனால் கமல் படத்தை பாராட்டினால் நான் கமல் ரசிகன் என்று சொல்லக் கூடாது. புரிஞ்சதா.

நான் ஸ்லீப்லெஸ் நைட் படம் பார்க்கவில்லை. பொதுவாக ஆங்கிலம் தவிர மற்ற வெளிநாட்டு மொழிப்படங்கள் பார்ப்பதில்லை. ஆங்கிலம் கூட விமர்சனத்தை படித்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டா தான். அதன் கதையையும் தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.


காலையில் எழுதிய வேதாளம் விமர்சனம் ஏகப்பட்ட இடங்களில் சர்ச்சையை உண்டாக்கி அதன் வேலையை காட்டிக் கொண்டு இருந்தது. முதல் பாதி முழுக்க போன் கால்கள் வந்து என்னை தொந்தரவு பண்ணிக் கொண்டே இருந்தது. அதனால் உன்னிப்பாக படத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. பிறகு போனை ம்யூட்டில் போட்டு விட்டேன். அதற்கப்புறம் படம் குதிரைப் பாய்ச்சலில் சென்று படக் கென்று முடிந்து விட்டது. ஆச்சரியம் தான், கமல் படத்தில் நான் இந்த அளவுக்கு இறங்கி கவனம் செலுத்தியது.

ஒரு இடத்தில் கொக்கையினை வழிப்பறி செய்கிறார் கமல் யூகிசேது உதவியுடன். மறுநாள் அந்த சரக்கை பறி கொடுத்த பிரகாஷ்ராஜ் கமல் மகனை கடத்தி வைத்து சரக்கை திரும்ப கேட்க காவல் அதிகாரியான கமல் அந்த சரக்கை திரும்ப கொடுக்க போக அவரை பின்தொடர்ந்து காவல் அதிகாரியான த்ரிஷா போக சரக்கை பெற கடத்தல்காரர் சம்பத் வர சரக்கை பிடுங்க கெட்ட காவல் அதிகாரி கிஷோர் வர அனைவரும் ஒரு பப்பில் சந்திக்கிறார்கள். முடிவு என்ன என்பது தான் படத்தின் கதை. 

படத்தில் கமல் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார் என்பதற்கு உதாரணம் ஜெகன் ஒரு இடத்தில் கூட அவரது அதிகபிரசங்கித்தனத்தை காட்ட வில்லை. தேவையை விட அதிகமாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. என்ன படத்துக்கு தேவையோ அதை மட்டும் பேசியிருக்கிறார்.

பப்பிற்குள் கொஞ்சம் கூட அலுக்காமல் ஒரு படம் முழுக்க எடுப்பது பெரிய கலை. அதை சரியாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர். எனக்கு ஒரு இடத்தில் கூட அயர்ச்சி ஏற்படவே இல்லை. 

நடிப்பு ராட்சசன்களான பிரகாஷ்ராஜ், சம்பத், கிஷோர் ஆகியோர்களை படத்தில் பயன்படுத்தியிருப்பதே படத்தின் சிறந்த ப்ளஸ். பிரகாஷ்ராஜ், கிஷோர் ஆகியோருக்கு நல்ல ஸ்கோப் உள்ள காட்சிகள் இருக்கிறது. சம்பத் மட்டும் வீணடிக்கப்பட்டு இருக்கிறார். 

கண்டிப்பாக கொடுத்த காசுக்கு ஒர்த் உள்ள படம். பார்த்து மகிழுங்கள். 

ஆரூர் மூனா

13 comments:

 1. Ungal pazhaya blog ennava aiytru ? kashtapattu marupadiyum kandu pidithu vitten
  vazhakkam pola ungal thani paani vimarsanam... nalla irunthichunna nalla irundhadhu nalla illa illana nalla illanu than sollanum athu thaan correct... intha padam illana adutha padam correct edukarathukku use pannanum aana parunga chinna pasanga appadithaan anyway nice to read your blogs

  ReplyDelete
  Replies
  1. நன்றி சரவணன் சார். பழைய பிளாக்கை ஏதோ ஒரு கம்ப்யுட்டர் அனானி, ஹேக் செய்து விட்டார். அதனால் இப்போ ஏழெட்டு மாதமா இந்த ப்ளாக்கில் எழுதி வருகிறேன்.

   Delete
 2. Go ahead with your reviews....no need to answer Anybody to express your views....unga kaasu, unga karuthu...

  ReplyDelete
  Replies
  1. எங்கங்க, வேதாளம் பக்கம் வந்து பாருங்க, கொத்து பரோட்டா போட்டு வச்சிருக்காங்க.

   Delete
 3. Ji ungal Current Ungal Money ungal urimai. Intha ajith vs vijay pasangaluku vera vela illa

  ReplyDelete
  Replies
  1. அதே அதே, நன்றி ஸ்ரீராம்

   Delete
 4. அவசியம் பார்க்கிறேன்..

  ReplyDelete
 5. FIRST TIME I WRITING COMMENTS IN BLOGS..I AM ONE OF THE SILENT READER OF UR REVIEW.FRANKLY TELLING TODAY U REVIEWED VEDALAM VERY BADLY.EVEN FRNDS SOME OF THEM ARE FANS OF OTHER ACTORS..ALSO TOLD MOVIE IS OK.(I EAGERLY WAITED FOR YOUR PULI REVIEW..BUT U DIDNT REVIEWED)
  1.U STARTED THE REVIEW BY ABUSING AJITH FANS(NO RASIGAR MANDRAM BUT RASIGAR SHOWS)
  2.AND U FINISHED THE REVIEW ALSO VERY BADLY..NO ISSUES..

  FIRST TIME I AM NOT SATISFIED WITH UR REVIEW..BUT CONTINUE TO REVIEW THE MOVIES ...I LIKE UR WAY OF REVIEWING..

  ReplyDelete
  Replies
  1. இங்கு வந்து கருத்து பதிவிட்டதற்கு நன்றி அப்சல், உங்களுக்கான பதிலை வோதளம் விமர்சன பக்கத்தில் உங்கள் கருத்துப் பதிவின் பதிலாக தந்துள்ளேன், படித்துப் பாருங்கள், நன்றி

   Delete
 6. Replies
  1. செல்லுங்கள், மனநிறைவை அள்ளுங்கள்.

   Delete
 7. Hi anna oru dout ulaganaayagan sirantha arivaali yerhukku oru remake yedukkanum
  Athil thiraikathai kamalhasan yendra peyar veru
  Intha padam kamal thaathavirkku kaasu kidaikkum avlothaan

  ReplyDelete